பரபரப்பு காட்சிகள்
தொலைக்காட்சியில் குஷால் பள்ளிப்
பேருந்தில் துப்பாக்கிச் சூடு என்று பிளாஸ் நியூஸ் ஓடியதைப் பார்த்தவுடன் பள்ளியின்
தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்த மரியம் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவருக்கு தொலைபேசியில் தகவல்
தெரிவித்தார்.
உடனே பதறி அடித்தபடி தன் கணவரையும்
உடன் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மலாலாவைஉடனே பார்த்துவிட வேண்டும்
என்று பதற்றத்துடன் விரைந்து சென்றார்
மரியம்.
சிகிச்சையளித்த மருத்துவர்கள்
தோட்டாக்கள் நெற்றிப் பகுதியில் பாய்ந்திருந்தபோதும் மூளையை சேதப்படுத்தவில்லை
என்பதைத் தெரிவித்தார்கள்.
மூளைப் பகுதியில் தோட்டாக்கள் பட்டிருந்தாலோ,பாய்ந்திருந்தாலோ விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்திருக்கும்.
நல்லவேளையாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.
மலாலாவின் தோழி ஷாஷியா ரம்ஜானுக்கும்
காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு தோட்டாதான் பாய்ந்திருந்தது என்றபோதும் உடலில்
இரண்டு இடங்களில் துளைத்துச் சென்றிருந்தது.
ஹய்னாட்டிற்கு சிறிய காயம்தான் என்று
வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். ஆனால் வீட்டிற்குச் சென்றவுடன்தான் அவளுடைய
உடலிலும் தோட்டா பாய்ந்திருப்பதைக் கண்டார்கள்.
உடனடியாக அவளும் மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லப்பட்டாள்.
மாகாணத்தின் முதல்வர் உடனடியாக
மலாலாவின் தந்தைக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்தார். பெஷாவரில் உள்ள பெரிய
மருத்துவமனையில் சிகிச்சை பெற தான்
ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
சம்பவம் நடைபெற்றதை அறிந்தவுடன்
பாகிஸ்தான் இராணுவத்தினர் உடனே அங்கு விரைந்தனர்.
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் மலாலாவைக்
கொண்டுவந்த அவர்கள் ஹெலிகாப்டரில் அவளை பெஷாவர் நகருக்கு உடனடியாக அழைத்துச்
சென்றார்கள்.
வீட்டில் பால்குடி மாறாத பிள்ளை
இருந்தபோதும் அவளைக் கவனிப்பதற்கு வேறு ஆட்களிடம் சொல்லி விட்டு, மலாலாவின் மேல் இருந்த பாசத்தின் காரணமாக தலைமையாசிரியை மரியமும்
உடன் சென்றார்.
பெஷாவரில் இறங்கி ஆம்புலன்ஸில் ஏற்றிச்
செல்லும் வழியில் தீவிரவாதிகளால் மீண்டும் தாக்கப்படுவோமோ என்று யூசுப் சாய்
சற்றே பயந்தார். உறவுக்காரர் ஹான்ஜி, அகமது ஷா,
தலைமையாசிரியை மரியம் ஆகியோர் ஆறுதல் கூறித்
தேற்றினார்கள்.
ஹெலிகாப்டருக்கு உள்ளே மலாலா இரத்த
வாந்தி எடுக்கத் தொடங்கினாள். யூசுப் சாய்
நம்பிக்கையிழக்கத் தொடங்கினார்.
“அவளின் கண்களைப் பாருங்கள், அவை கண்ணீர் சொரிகின்றன, அவள் உடலிலும் பலமான அசைவுகள் தெரிகின்றன. எனவே
நீங்கள் பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் அவளைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பான்
நீங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருங்கள்” என்று அவ்வப்போது
யூசுப்பிடம் நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கூறி தேற்றினார் மரியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக