இவர்
இந்தியாவின்
பெருமைக்குரிய மனிதர். இன்றுவரை 26 பல்கலைக் கழகங்களால் கௌரவ டாக்டர்
பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர்.
இந்திய அரசால்
பத்ம பூஷண், பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டவர்.
சாதாரண
குடும்பத்தில் பிறந்தாலும் சாதிக்க முடியும் என்பதை தன் வாழ்க்கையின் மூலம்
காட்டிக் கொண்டிருப்பவர், அதேபோல எவ்வளவு உயர்ந்த பதவிக்குப்
போனாலும் எளிமையாக இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.
குடியரசுத்
தலைவர் பதவியில் இருந்தபோதும் அதைவிட்டு வந்தபோதும் எளிமை, எளிமையென்று தனது ஒவ்வொரு செயலிலும் வாழ்ந்து காட்டியவர்.
இந்தியாவின்
கடைக்கோடி நகரில் பிறந்து டெல்லியில் பெரும் பதவியில் அமர்ந்த பெருமை பெற்றவர்.
பதவியால்
இவருக்குப் பெருமை என்பதைவிட இவரால் அந்தப் பதவிக்குப் பெருமை என்பதற்கு உதாரணமாக
வாழ்ந்து காட்டியவர்.
பிறப்பால் ஒரு
முஸ்லீமாக இருந்தபோதும் எந்தவிதமான மத உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவர்.
இன்றைய
இளைஞர்களை ‘கனவு காணுங்கள்’ என்று கூறி அவர்களுக்கு உற்சாகம் தந்தவர். இளைஞர்களை வாழ்வில்
மட்டுமல்லாமல் நாட்டு நலனிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தவர்.
புத்தகங்கள்
படிப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர், பரந்த மனப்பான்மை உள்ளவர்.
இவர்
சொல்லியவைகளைவிட செய்தது அதிகம். அவரது வாழ்க்கை இளைஞர்களை உற்சாகம் கொள்ளச்
செய்யும். தன்னம்பிக்கை ஊட்டும்.
அவரது வாழ்வின்
சாதனைகளைப் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக